சுடச்சுட

    


      பண்ருட்டி அருகே லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
     பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் (43). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அண்மையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து பண்ருட்டிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். பணிக்கன்குப்பம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியதில் சிதம்பரம் பலத்த காயமடைந்தார். இதையடுத்து புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai