சுடச்சுட

  


  நேரு இளையோர் மையம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் இளையோர் நாடாளுமன்றம் நிகழ்ச்சி கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. 
   விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு மாவட்ட இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் மா.ஹெலன்ராணி தலைமை வகித்தார். சார்-ஆட்சியர் கே.எம்.சரயூ ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். 
   ஊர்வலத்தில் இளையோர் மன்றத்தினர் சுமார் 200 பங்கேற்று, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். நகர அரங்கிலிருந்து தொடங்கிய ஊர்வலம் பாரதி சாலை, கடற்கரைச் சாலை வழியாகச் சென்று தனியார் ஐடிஐ வளாகத்தில் நிறைவடைந்தது. 
   தொடர்ந்து அங்கு இளையோர் நாடாளுமன்றம் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. கடலூர் வட்டாட்சியர் ஜி.செல்வக்குமார், துணை வட்டாட்சியர் ஜி.ராஜேஷ்பாபு ஆகியோர் வாக்குப் பதிவு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். 
  மேலும், மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்து கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பி.அப்பாண்டைராஜ், உதவி ஆய்வாளர் விஸ்வநாதன், மருத்துவ விழிப்புணர்வு குறித்து ரத்த வங்கி அலுவலர் எஸ்.அன்புசெல்வி, தூய்மை பாரதம் குறித்து இயக்க ஒருங்கிணைப்பாளர் ரா.ச.வேலுமணி ஆகியோர் பேசினர். முன்னதாக இக்னைட் இளைஞர் மன்றத் தலைவர் ஏ.ஜோஸ் மகேஷ் வரவேற்க,  இளையோர் மைய கணக்காளர் கே.புஷ்பலதா நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai