சுடச்சுட

  

  வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற விவரங்களை வெளியிட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

  By DIN  |   Published on : 17th March 2019 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்ற விவரங்களை வெளியிட  வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவுறுத்தினார்.
  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ச.சந்தோஷினிசந்திரா (பொது), கே.விநாயகம்பிள்ளை (கணக்கு), தேர்தல் வட்டாட்சியர் ப.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் பொதுவானதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் உள்ளன. எனவே, வேட்பாளர்கள் தங்களது வாகனத்துக்கான அனுமதி, பொதுக்கூட்டம், பேரணிக்கான அனுமதி ஆகியவற்றை எவ்வித அலைச்சலுமின்றி பெற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் இணைய தள வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக ள்ன்ஸ்ண்க்ட்ஹ ஹல்ல் என்ற செல்லிடப்பேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனை வேட்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக மட்டுமே அனுமதி பெற முடியும். பொதுக்கூட்டத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக இந்த அனுமதியை பெற வேண்டும் என்றார் ஆட்சியர்.
  மேலும், தற்போதைய புதிய நடைமுறையின்படி ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது மீதுள்ள குற்ற விவரங்களை செய்தித் தாள்களில் விளம்பரமாக வெளியிட வேண்டும். இந்த விளம்பரங்களை 3 முறை கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்றார் ஆட்சியர்.
  தொடர்ந்து சுவிதா செயலியின் செயல்பாடுகள் குறித்து ஒளித் திரையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில், அதிமுக நகரச் செயலர் ஆர்.குமரன், திமுக நகரச் செயலர் கே.எஸ்.ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலர் சா.முல்லைவேந்தன், மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோ.மாதவன், பாஜக கலைப் பிரிவு தலைவர் ஏ.எம்.வெங்கடேசன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அருள்பாபு, பகுஜன் சமாஜ் சார்பில் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai