வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல்: தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

வாகன ஓட்டிகளிடம் முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பாக, மருதூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


வாகன ஓட்டிகளிடம் முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பாக, மருதூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
 கடலூர் மாவட்டம், மருதூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் ஷர்மா. இவர், காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தன்னிச்சையாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் உத்தரவிட்டார். இதில், ஷர்மா மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
பணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக, 
கடந்த ஓராண்டுக்கு முன்பு ஷர்மா விழுப்புரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com