மாதிரி வாக்குச் சாவடி மையம் திறப்பு

என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில், நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்குச் சாவடி மையத்தை மாவட்ட

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில், நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்குச் சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியர்  வெ.அன்புச்செல்வன் சனிக்கிழமை திறந்து வைத்தார். 
மக்களவை தேர்தலை முன்னிட்டு நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வகையில் என்எல்சி இந்தியா நிறுவனம் மத்திய பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குச் சாவடி மையத்தை அமைத்துள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் சனிக்கிழமை திறந்து வைத்தார். பின்னர், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்கள், பேருந்து பயணிகள், ஆட்டோ ஓட்டுநர்களிடம்  வழங்கினார். 
பின்னர் ஆட்சியர் பேசியதாவது: கடலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு என்எல்சி நிறுவனம் சமூக அக்கறையோடு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குச் சாவடி மையத்தை அந்த நிறுவனம் தொடக்கியுள்ளது. 
பொதுமக்கள் யாருடைய நிபந்தனைகளுக்கும் உள்படாமல் அச்சமின்றி 100 சதவீத வாக்களிப்பை  உறுதிப்படுத்த வேண்டும். தேர்தல் தொடர்பான தவறான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர். 
தொடர்ந்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. என்எல்சி இந்தியா நிறுவன முதன்மை பொது மேலாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com