விழப்பள்ளம் முருகன் கோயில் தேரோட்டம்

குறிஞ்சிப்பாடி, விழப்பள்ளத்தில் அமைந்துள்ள சிங்கபுரி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில், பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி, விழப்பள்ளத்தில் அமைந்துள்ள சிங்கபுரி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில், பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
 இந்தக் கோயிலில் கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாலையில் இந்திர விமானம், இடும்ப, காமதேனு, செம்மரிகிடா, ரிஷப, யானை, குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவின் 9-ஆம் நாளான புதன்கிழமை காலை பஞ்சமூர்த்திகளின் திருத்தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதி வழியாகச் சென்ற தேர், மீண்டும் தேரடியை அடைந்தது. வியாழக்கிழமை பங்குனி உத்திரப் பெருவிழாவும், வெள்ளிக்கிழமை தெப்பத் திருவிழாவும் நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com