Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர்

    By DIN  |   Published On : 24th March 2019 01:14 AM  |   Last Updated : 24th March 2019 01:14 AM  |  அ+அ அ-  |  


    மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ், கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
     கடலூரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகத்தை டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், வி.சுப்புராயன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.கருப்பையன், நகரச் செயலர் ஆர்.அமர்நாத், ஒன்றியச் செயலர் ஜே.ராஜேஷ்கண்ணன், சிப்காட் செயலர் எம்.சிவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.பாஸ்கரன், முத்துக்குமாரசாமி, ஆர்.தமிழரசன், ஆர்.ஆளவந்தார் மற்றும் குடியிருப்போர் சங்கத்தினர், ஓய்வுபெற்றோர் சங்கத்தினர், தனி அரங்கத்தினர் உள்ளிட்டோர்  திமுக வேட்பாளரை வரவேற்றனர்.  திமுக மாணவரணி மாநிலச் செயலர் இள.புகழேந்தி, நகரச் செயலர் து.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல, இதர கூட்டணிக் கட்சி தலைவர்களையும் திமுக வேட்பாளர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp