மின் ஊழியர்கள் கோட்ட மாநாடு
By DIN | Published On : 24th March 2019 01:14 AM | Last Updated : 24th March 2019 01:14 AM | அ+அ அ- |

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோட்ட மாநாடு திட்டக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, விருத்தாசலம் கோட்டத் தலைவர் டி.ராஜசேகர் தலைமை வகித்தார். கூட்டத்தில்,விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகள் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். விருத்தாசலம் கோட்டத் தலைவராக டி.முருகன், துணைத் தலைவராக எஸ்.சேகர், செயலராக ஆர்.ஆறுமுகம், இணைச் செயலராக எம்.சிவராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திட்டக்குடி கோட்டத் தலைவராக எ.கண்ணன், துணைத் தலைவராக இ.பாலு, செயலராக டி.ராஜகோபால், இணைச் செயலராக கே.நல்லதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் மாவட்டச் செயலர் என்.தேசிங்கு, பொருளாளர் என்.கோவிந்தராசு, மாநிலச் செயலர் டி.பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.