முந்திரி வியாபாரி வீட்டில் 6 பவுன் நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 24th March 2019 01:14 AM | Last Updated : 24th March 2019 01:14 AM | அ+அ அ- |

பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரி வீட்டிலிருந்து 6 பவுன் நகை, பணம் திருடியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி வட்டம், காட்டாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). முந்திரி வியாபாரி. இவரது மனைவி ராஜகுமாரி (42). பங்குனி உத்திரம் விழா நடைபெற்ற கடந்த 21-ஆம் தேதி மாலை ராஜகுமாரி வீட்டை பூட்டிவிட்டு, சாவியை வாசக்கால் அருகே மறைத்து வைத்துவிட்டு குடும்பத்துடன் அருகே உள்ள முருகன் கோயிலுக்குச் சென்றார்.
பின்னர், திரும்பி வந்து பார்த்தவர் வீட்டுக் கதவு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 6 பவுன் தங்க நகை, ரூ.12
ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனதை அறிந்தார். மறைத்து வைத்திருந்த வீட்டு சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்ம நபர், பீரோவை உடைத்து நகை, பணம் திருடிச் சென்றது தெரியவந்தது. ஹஇதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விரல் ரேகை நிபுணர்கள் பதிவுகளை ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து ராஜகுமாரி அளித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.