Enable Javscript for better performance
அதிமுக ஆட்சியில் 10 இடங்களில் தடுப்பணை: ஏ.அருண்மொழிதேவன் எம்பி- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக ஆட்சியில் 10 இடங்களில் தடுப்பணை: ஏ.அருண்மொழிதேவன் எம்பி

    By DIN  |   Published on : 27th March 2019 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் அதிமுக அரசு 10 இடங்களில் தடுப்பணை கட்டும் திட்டத்தை அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது என கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி கூறினார்.
     சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு, கடலூர் மாவட்ட தமாகா தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவர் கே.நாகராஜன், எஸ்.கே.வைத்தி, கே.ராஜா சம்பத்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் கே.ரஜினிகாந்த், மகளிரணி தலைவி கே.ராஜலட்சுமி, மாணவரணி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் வரவேற்றார். தமாகா மாநிலச் செயலர் ஏ.எஸ்.வேல்முருகன் சிறப்புரையாற்றினார்.
     கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி பங்கேற்று, தமாகா நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது: தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து வாக்கு சேகரிக்க வேண்டும். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு, 10 இடங்களில் தடுப்பணை கட்டும் திட்டத்தை அறிவித்து பணிகளை தொடங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ரூ.400 கோடியில் கொள்ளிடத்தின் குறுக்கே கதவணை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு தேர்தல்தான் இந்த தொகுதி பக்கம் தொல்.திருமாவளவன் வருவார் என்றார் அவர்.
     கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், முன்னாள் அமைச்சர் செல்வி.ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட பாசறை தலைவர் டேங்க் ஆர்.சண்முகம், நகரச் செயலர் ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai