Enable Javscript for better performance
அமமுக நிர்வாகி நீக்கம்: ஆதரவாளர்கள் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    அமமுகவின் கடலூர் நகரச் செயலர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
     டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கடலூர் நகரச் செயலராக இருந்தவர் வினோத்ராஜ். இவர் அந்தப் பொறுப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டார். மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளராக இருந்த வி.கே.முத்துக்குமாருக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த வினோத்ராஜ் தனது ஆதரவாளர்களுடன் கடலூரில் உள்ள அமமுக தேர்தல் பணிக்குழு அலுவலகத்துக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
     இதுகுறித்து மாவட்ட செயலர் வி.டி.கலைச்செல்வனிடம் கேட்டபோது, நகர செயலராக இருந்த வினோத்ராஜ் பணிச்சுமை காரணமாக தன்னை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு விரைவில் வேறு பொறுப்பு வழங்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai