Enable Javscript for better performance
உணவகப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நெய்வேலி கடை வீதியில் உள்ள உணவகப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரி செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     நெய்வேலியில் அமைந்துள்ள பொதுத் துறை நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் உள்ள சங்கம் மூலம் சிறப்புப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த சிறப்புப் பள்ளியில் நெய்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் சுமார் 100 பேர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, சிறப்பாசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.
     மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் வளர்ச்சிக்காக நெய்வேலி கடை வீதியில் சிறப்பு உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களை, சேவை சங்க செயலரும், உணவக மேலாளரும் தரக் குறைவாகப் பேசி, வேலையை விட்டு நீக்கி விடுவதாக மிரட்டி வருகின்றனராம். இதைக் கண்டித்தும், ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் உணவகப் பணியாளர்கள் உணவகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai