Enable Javscript for better performance
கடலூரில் 41 பேர், சிதம்பரத்தில் 25 பேர் வேட்புமனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் 41 பேர், சிதம்பரத்தில் 25 பேர் வேட்புமனு தாக்கல்

    By DIN  |   Published on : 27th March 2019 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட மொத்தம் 41 பேரும், சிதம்பரம் தொகுதியில் 25 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
     தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மார்ச் 19-ஆம் தேதி முதல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நடைமுறை தொடங்கியது.
     முதல் 3 நாள்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22)சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் முடிவுற்ற நிலையில் மொத்தம் 41 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
     அரசியல் கட்சியினர், பல்வேறு இயக்கங்கள், சுயேச்சைகள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இதில், பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமி 4 மனுக்களையும், அவருக்கான மாற்று வேட்பாளர் தமிழரசி 2 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ர.சித்ரா 2 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 36 பேர் 41 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
     செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவுற்றது. எனவே, செவ்வாய்க்கிழமை மட்டும் 20 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில், 3 மணிக்கு முன்பாக வந்திருந்து காத்திருந்த சுமார் 6 பேர் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியரின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
     அதன்பின்னர் அந்த அறை பூட்டப்பட்டது. எனவே, அந்த அறைக்குள் சென்ற 6 சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது மனுக்களை தாக்கல் செய்துவிட்டு சுமார் 2 மணி நேரம் கழித்தே திரும்பினர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெறுகிறது.
     சிதம்பரம்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட செவ்வாய்க்கிழமை மட்டும் 15 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த தொகுதியில் மொத்தம் 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai