Enable Javscript for better performance
கடலூர், சிதம்பரம் தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர், சிதம்பரம் தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

    By  கடலூர்/சிதம்பரம்,  |   Published on : 27th March 2019 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
     அந்தக் கட்சியின் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், மாநில பொறியாளர் அணிச் செயலருமான கே.ஆர்.கார்த்திக், மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக பொதுக்குழு உறுப்பினர் கே.தங்கவேல் வேட்புமனு தாக்கல் செய்தார்.
     பின்னர், கே.ஆர்.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     கடலூர் தொகுதியில் நான் வெற்றி பெற்றால் முந்திரி ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும், பலாப்பழம் குளிர்பதனக் கிடங்கு அமைக்கவும், குடிநீர் பிரச்னை, என்எல்சி பிரச்னைக்குத் தீர்வு காணவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
     அப்போது, மாவட்ட அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் சோழன் சம்சுதீன், வழக்குரைஞர் பிரிவு மாநில துணைச் செயலர் சத்தியராஜ், நகரச் செயலர்கள் முத்துக்குமார், மார்க்கெட் நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
     மக்கள் நீதி மய்யம்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.அண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வனிடம் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயலர் பால.வீரவேல் உடனிருந்தார்.
     சிதம்பரம்: சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஆ.இளவரசன், அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
     அப்போது, அமமுக மாவட்டச் செயலர் துரை.மணிவேல், அமைப்புச் செயலர் பாளை.அமரமூர்த்தி, கடலூர் மேற்கு மாவட்டச் செயலர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
     முன்னதாக வேட்பாளர் ஆ.இளவரசன் அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai