Enable Javscript for better performance
கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஆர்.கே. இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் கட்டடவியல் துறை மாணவர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     நிகழ்ச்சியில், எம்.ஆர்.கே. இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தொழில்நுட்பக் கட்டுரையை நடுவர்களிடம் வழங்கினர்.கல்லூரி சேர்மன் எம்.ஆர்.கே.பி.கதிரவன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர் வி.முருகையன் பங்கேற்று கருத்தரங்கை தொடக்கி வைத்தார். அவர் பேசுகையில், மண்ணியல் துறை பற்றியும், மண்ணின் பண்புகள் பற்றியும் எடுத்துரைத்தார். கல்லூரி முதல்வர் கோ.ஆனந்தவேலு வாழ்த்துரை வழங்கினார். ஏவிடி பொறியியல் கல்லூரி இணைப் பேராசிரியர் ரா.ஜெயசங்கர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுத் தொகையை வழங்கினார்.ந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai