Enable Javscript for better performance
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருமுட்டம் பயணியர் மாளிகை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
     சங்கத்தின் மாவட்ட தலைவர் ந.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திருமுட்டம் புதிய கிளை தொடங்கப்பட்டது. அதன் தலைவராக டி.குலசேகரன், செயலராக எஸ்.நமச்சிவாயம், பொருளாளராக என்.குமாரசாமி, துணைத் தலைவராக கே.அய்யாக்கண்ணு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மாவட்ட செயலர் த.கண்ணன் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினார்.
     கூட்டத்தில், திருமுட்டம் வருவாய் வட்டத்தில் தனியாக கிளைக் கருவூலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 7-ஆவது ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     நிர்வாகிகள் குழந்தைவேலு, மோகன், சாவித்திரி, வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணைச் செயலர் டி.சிற்றம்பலம் நன்றி கூறினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai