Enable Javscript for better performance
தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை பிரிவில் சேர்க்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை பிரிவில் சேர்க்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 27th March 2019 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை பிரிவில் சேர்க்க வேண்டும் என தலித் கிறிஸ்தவ ஆசிரியர் அலுவலர் நலச் சங்கம் வலியுறுத்தியது.
     இந்தச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடலூரில் மாநிலத் தலைவர் சி.ஜான்பிரிட்டோ தலைமையில் அண்மையில் நடைபெற்றது. ஆற்காடு லுத்தரன் திருச்சபை போதகர் பீட்டர் பால் தாமஸ் பங்கேற்று, சங்க அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தென்னிந்திய திருச்சபையின் போதகரும், சமூக நல வாரிய இணை இயக்குநருமான அருண் செபஸ் வாழ்த்திப் பேசினார்.
     கூட்டத்தில், தலித் கிறிஸ்தவர்களை அட்டவணைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும். கிறிஸ்தவர்களின் புனித வாரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் தேதியை மாற்றி அமைத்து 100 சதவீத வாக்குப் பதிவை நிலைநாட்ட வேண்டும்.
     பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சாலமோன், இருதயராஜ், ஜான்ஜார்ஜ், ஆரோக்கியமேரி, பொன்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     முன்னதாக மாநில பொதுச் செயலர் ஜோ.பாஸ்கர் ரிச்சர்ட் வரவேற்க, பொருளாளர் அ.மகிமைதாஸ் நன்றி கூறினார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai