Enable Javscript for better performance
திமுக கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    விருத்தாசலத்தில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     கடலூர் மக்களவைத் தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதி கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக மாவட்ட செயலர் சி.வெ.கணேசன் எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில், வேட்பாளரின் வெற்றிக்கு அனைத்து கூட்டணி கட்சியினரும் ஒருங்கிணைந்து பாடுபடுவதென முடிவெடுக்கப்பட்டது. மேலும், பிரசாரம் செல்லும் இடங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
     கூட்டத்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் டி.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பணிக்குழு சுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலர் பா.தாமரைசெல்வன், திராவிடர் கழக மாவட்ட செயலர் அறிவு, மதிமுக சம்பத்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்பாளர் சின்னதுரை, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் பி.வி.பி.முத்துகுமார், தமிழரசன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.எஸ்.ஆனந்த் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai