Enable Javscript for better performance
தேர்தல் பணியில் ஈடுபடுவோரை உடனடியாகக் கண்டறிய செயலி: கடலூர் மாவட்ட காவல் துறை ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் பணியில் ஈடுபடுவோரை உடனடியாகக் கண்டறிய செயலி: கடலூர் மாவட்ட காவல் துறை ஏற்பாடு

    By DIN  |   Published on : 27th March 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் பணியில் ஈடுபடுவோரை உடனடியாகக் கண்டறியும் செயலியை கடலூர் மாவட்ட காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.
     கடலூர் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடலூர், சிதம்பரம் (தனி) மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய இந்த மாவட்டத்தில் 1,183 இடங்களில் 2,301 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தேர்தல் பணியில் சுமார் 15 ஆயிரம் பேர் ஈடுபடும் நிலையில், அவர்களை உடனடியாகத் தொடர்பு கொள்வது என்பது காவல் துறைக்கும், வருவாய்த் துறைக்கும் சவாலான விஷயமாகும்.
     குறிப்பாக, மாவட்டத் தலைநகரில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு வாக்குச் சாவடியில் பிரச்னை ஏற்பட்டால், அந்த வாக்குச் சாவடியின் பொறுப்பாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட புத்தகத்தை புரட்டி அதிலிருந்து பொறுப்பாளர்கள் பெயரைத் தேட வேண்டியிருக்கும். இந்தப் புத்தகத்தை கையில் எடுத்துச் செல்வதிலும் சிரமம் உள்ளது.
     எனவே, இதை மாற்றியமைக்கும் முயற்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஈடுபட்டார். இதற்காக, வாக்குச் சாவடிகள் அமைய உள்ள 1,183 இடங்களுக்கும் நேரடியாக ஆள்களை நியமித்து அதன் அட்ச, தீர்க்க ரேகையுடன் இடங்களைப் பதிவு செய்ய வைத்தார். பின்னர், "எக்ஸ்கான் இன்போடெக்' என்ற நிறுவனத்துடன் இணைந்து மக்களவைத் தொகுதிகள், அதில் அடங்கியுள்ள சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்குச் சாவடி மையங்கள் பகுக்கப்பட்டன. இதுதொடர்பாக செல்லிடப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டது.
     அந்தந்த காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டு, அதன் பொறுப்பு அலுவலர்களின் செல்லிடப்பேசி எண்கள் அனைத்தும் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
     இந்தச் செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:
     கடந்த கால தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில் இன்க்க்ஹப்ர்ழ்ங் ஈண்ள்ற்ழ்ண்ஸ்ரீற் உப்ங்ஸ்ரீற்ண்ர்ய் அல்ல் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
     இதன்மூலம் 2,301 வாக்குச் சாவடி மையங்களின் பொறுப்பாளர்கள், காவல் துறையின் 195 நடமாடும் பாதுகாப்பு வாகனங்களின் பொறுப்பாளர்களது செல்லிடப்பேசி எண்களையும் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.
     மேலும், பிரச்னைக்குரிய இடத்துக்கு உடனடியாகச் செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் பணியை மேலும் எளிமையாக்கும்.
     தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் மட்டுமே இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியும் என்றார் அவர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai