Enable Javscript for better performance
தொடர் நகை திருட்டு: இருவர் கைது; 43 பவுன் நகைகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    தொடர் நகை திருட்டு: இருவர் கைது; 43 பவுன் நகைகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 27th March 2019 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி பகுதியில் தொடர் நகை திருட்டு தொடர்பாக போலீஸார் இருவரை செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 43 பவுன் தங்க நகைகள், ரூ.1.35 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
     பண்ருட்டி வட்டம், ஆத்திரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி ராணி (30). இவர், திங்கள்கிழமை முத்தாண்டிக்குப்பம் கடை வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
     அப்போது, அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் இருவர் ராணியை தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார்.
     இதேபோல, கடந்த 10-ஆம் தேதி காட்டுக்கூடலூரைச் சேர்ந்த கலைச்செல்வி வீட்டிலும், 21-ஆம் தேதி காட்டாண்டிக்குப்பத்தைச் சேர்ந்த ராஜகுமாரி வீட்டிலும் தங்க நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
     இதுகுறித்த புகார்களின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர் திருட்டுகள் தொடர்பாக, பண்ருட்டி டிஎஸ்பி நாகராஜன் நடவடிக்கையின் பேரில் 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கொள்ளுக்காரன்குட்டை சந்திப்பு அருகே போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
     அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து, அதிலிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
     விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம், வானூர், பெரம்பை பங்களாமேடு பேருந்து நிறுத்தம் அருகே வசிக்கும் சண்முகம் மகன் வேலன் (45), செஞ்சி வட்டம், மேல்அருங்குணத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் சங்கர் என்ற ஜெயசங்கர் (38) ஆகியோர் எனத் தெரியவந்தது.
     அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் காட்டுக்கூடலூரில் கலைச்செல்வி வீட்டு கதவை உடைத்து 27 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தையும், காட்டாண்டிக்குப்பத்தில் ராஜகுமாரி வீட்டு கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களையும், முத்தாண்டிக்குப்பத்தில் ராணி என்பவரை வழிமறித்து நகை பறித்துச் சென்றதையும் ஒப்புக்கொண்டனராம்.
     இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 43 பவுன் தங்க நகைகள், ரூ.1.35 லட்சம் பணம், கார், பைக் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai