Enable Javscript for better performance
நகை வியாபாரிகள் விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டியில் காவல் துறை சார்பில் தங்க நகை வியாபாரிகள், அடகு வியாபாரிகள் விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
     தங்க நகை வியாபாரிகள் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமை வகித்தார். தங்க நகை வியாபாரிகள் சங்கக் காப்பாளர் ப.ஷ.ரங்கநாதன் முன்னிலை வகித்தார்.காவல் உதவி ஆய்வாளர் பாக்கியலட்சுமி வரவேற்றார்.
     தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.எஸ்.பி.சக்திவேல், செயலர் எம்.விஜய், பொருளாளர் எம்.குமார்பால், துணைத் தலைவர் டி.கெஜபதி, மாவட்டத் தலைவர் பி.தேவராஜ், மூத்த நிர்வாகிகள் பி.துரை, எஸ்.வி.அருள், சி.சாந்திலால், ஜெ.ஏ.அசோக்ராஜ், ஜி.விஜயராஜ், எஸ்.எம்.ராமச்சந்திரன், என்.கலியமூர்த்தி, அடகுக் கடை நிர்வாகிகள் எஸ்.தியாகராஜன், என்.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தங்க நகை வியாபாரிகள் அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக டோக்கன் பெற்றுக் கொண்டு பணம், பரிசுப் பொருள்களை வழங்கக் கூடாது.
     நகைக் கடன் வாங்கிய கடன்தாரர்களே நகைகளை மீட்க வேண்டும். அரசியல் பிரமுகர்கள் கடனை மீட்டால் தேர்தல் விதிமுறை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்.
     அனைத்துக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சாலையை பார்த்தவாறும் கேமரா வசதி ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai