Enable Javscript for better performance
பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்ட 48 பேருக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு: காவல் துறை நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்ட 48 பேருக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு: காவல் துறை நடவடிக்கை

    By DIN  |   Published on : 27th March 2019 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்ட 48 பேருக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் கூறினார்.
     கடலூரில் அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பதிவு செய்யப்பட்ட கொலை, ஆதாய கொலை, பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசால் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் கடந்த 2018-19- ஆம் நிதியாண்டில் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட 22 பேருக்கும், ஆதாய கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட 2 பேருக்கும் தலா ரூ.2.50 லட்சம் காவல் துறையால் பெற்று வழங்கப்பட்டுள்ளது. கொடுங்காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ.3 லட்சமும், பாலியல் வன்புணர்வு வழக்கில் 6 பேருக்கு தலா ரூ.1 லட்சமும், பாலியல் வழக்கில் 16 பேருக்கு தலா ரூ.1 லட்சமும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 48 பேருக்கு ரூ.85 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் நீதிபதி சுந்தரம் விரைந்து தீர்ப்பு வழங்கி இந்தத் தொகைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்திட நடவடிக்கை மேற்கொண்டார் என்றார் அவர்.
     மேலும் அவர் கூறுகையில், மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பல்வேறு கட்சியினர் மீது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுவர் விளம்பரம் வரைந்தது, பதாகை வைத்தது, வாகனங்களில் அனுமதியின்றி கொடி கட்டியிருந்தது தொடர்பாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் எஸ்பி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai