Enable Javscript for better performance
பள்ளியில் விளையாட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    விருத்தாசலம் ஜெயப்பிரியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 4-ஆம் ஆண்டு விளையாட்டு விழா, கல்விக் குழுமத் தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
     பள்ளி முதல்வர் அ.முருகன் முன்னிலை வகித்து பேசினார். கம்மாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சந்தோஷ் விளையாட்டு விழாவை தொடக்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். போட்டியில், பி.வி.சிந்து இல்லம் பிரிவினர் அதிக போட்டிகளில் வென்று முதலிடம் பெற்றனர். இந்தக் குழு மாணவ, மாணவிகளுக்கு ஜெயப்பிரியா கல்வி அறக்கட்டளை செயலர் கஸ்தூரி அம்மாள் பெயரால் வழங்கப்படும் சுழல் கேடயம் வழங்கப்பட்டது.
     நிர்வாக அலுவலர் ராமன் குமாரமங்கலம், ஒருங்கிணைப்பாளர்கள் சுமதி, அஜித்தா, மேரி ஜான்சிராணி, விளையாட்டு ஆசிரியர்கள் ஜெயராஜ்டேவிட், சஞ்சனா, விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, துணை முதல்வர் இராஜகயல்விழி வரவேற்க, விளையாட்டு ஆசிரியர் நிர்மல் நன்றி கூறினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai