Enable Javscript for better performance
போட்டித் தேர்வை எதிர்கொள்ள பல்கலை.யில் விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    போட்டித் தேர்வை எதிர்கொள்ள பல்கலை.யில் விழிப்புணர்வு

    By DIN  |   Published on : 27th March 2019 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் இருக்கை சார்பில், அரசு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
     அம்பேத்கர் இருக்கை இணைப் பேராசிரியர் கே.செளந்திரராஜன் வரவேற்றார். மொழியியல் புல முதல்வர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் வி.திருவள்ளுவன் நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப் பேசினார். கல்வி விவகாரங்கள் பிரிவு இயக்குநர் ஏ.ராஜசேகரன் பாராட்டி பேசினார். இந்திய பொது நிர்வாகக் கழகத்தின் புதுச்சேரி பிரிவு தலைவர் ஆர்.ஆர்.தனபால், நிர்வாக பயற்சி மைய பயிற்சியாளர் ஆர்.சபரி ஆகியோர் மாணவர்களுக்கு அரசு போட்டித்ú தர்வுகளை எதிர்கொள்ளும் முறை குறித்து விளக்கினர். அம்பேத்கர் இருக்கை துணைப் பேராசிரியை வி.ராதிகாராணி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai