Enable Javscript for better performance
கடலூர் அமமுக வேட்பாளர் மனு தள்ளுபடி: மாற்று வேட்பாளரின் மனு ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் அமமுக வேட்பாளர் மனு தள்ளுபடி: மாற்று வேட்பாளரின் மனு ஏற்பு

    By DIN  |   Published on : 28th March 2019 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மக்களவைத் தொகுதிக்கான அமமுக வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
     கடலூர் மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அந்தக் கட்சியின் பொறியாளர் அணிச் செயலர் கே.ஆர்.கார்த்திக் வேட்புமனு தாக்கல் செய்தார்.
     வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது. இதில், கார்த்திக்கின் வேட்புமனுவை தள்ளுபடி செய்வதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வெ.அன்புச்செல்வன் அறிவித்தார்.
     சுயேச்சை வேட்பாளராகக் கருதப்படும் அமமுக வேட்பாளரை 10 பேர் முன்மொழிய வேண்டும். அதன்படி, முன்மொழிந்த 10 பேரில் 2 பேரின் பெயர் தற்போதைய வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்ட பகுதியில் இல்லையாம். எனவே, 8 பேர் மட்டுமே முன்மொழிந்திருப்பதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
     இதுகுறித்து அமமுக நிர்வாகி சுந்தரமூர்த்தி கூறியதாவது:
     முன்மொழிந்தவர்களில் 2 பேரின் பெயர் கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் நாங்கள் குறிப்பிட்டபடி உள்ளது. ஆனால், 2019- ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் நாங்கள் குறிப்பிட்டிருந்த பாகம், வரிசை எண்ணில் அவர்களது பெயர் இல்லையாம். எனினும், அதே வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் இருப்பதால், ஏற்றுக் கொள்ளுமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தினோம். ஆனால், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார் என்றார் அவர். அதேநேரம், அமமுக சார்பில் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த காசி.தங்கவேலின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai