Enable Javscript for better performance
காங்கிரஸ் தலைவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியைக் கண்டித்து, கடலூரில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     பிரதமர் நரேந்திர மோடி தனது பெயருடன் காவலாளி என்ற பொருள்படும் படியான இந்தி வார்த்தையை சேர்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதை விமர்சிக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த 25-ஆம தேதி (திங்கள்கிழமை) சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பிரதமரை மாற்றுத் திறனாளிகளுடன் ஒப்பிட்டு ஊனத்தை கேலி செய்யும் விதத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது.
     அவரது இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடலூரில் மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கம், உன்னால் முடியும் தோழா மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் மற்றும் கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமை வகித்தார். உன்னால் முடியும் தோழா சங்கத் தலைவர் எஸ்.சையதுமுஸ்தபா, பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி.குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
     இதில், மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான சட்டத்தின்படி ஊனத்தை அவதூறாகப் பேசிய கே.எஸ்.அழகிரி மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
     ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தைச் சேர்ந்த புருஷோத், விஜயகுமார், உன்னால் முடியும் தோழா சங்கத்தைச் சேர்ந்த குமரவேல், சுப்புராயன், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இரா.தருமன், அப்துல்கலாம் பேரவையைச் சேர்ந்த எஸ்என்கே.ரவி, மீனவர் பேரவையைச் சேர்ந்த எம்.சுப்புராயன், தனியார் பேருந்து தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த குரு.ராமலிங்கம், அச்சக உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த எம்.கார்த்திகேயன், வழக்குரைஞர் முருகன், பேருந்து நிலைய சிறு வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த ஜி.சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai