Enable Javscript for better performance
சாதிய மோதலை ஏற்படுத்த சதி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புகார்- Dinamani

சுடச்சுட

    

    சாதிய மோதலை ஏற்படுத்த சதி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புகார்

    By DIN  |   Published on : 28th March 2019 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "டிக்-டாக்' செயலி மூலம் சிதம்பரம் தொகுதியில் சாதிய மோதலை ஏற்படுத்தி, தேர்தலைச் சீர்குலைக்க சதி நடப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்குரைஞர்கள் அணியினர் எஸ்.பி.யிடம் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
     சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார்.
     இந்த நிலையில், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அவர் ஏற்கெனவே பேசிய பேச்சுகள், கட்சியின் அடையாளத்துடன் சிலர் "டிக்-டாக்' செயலியில் பேசிய பேச்சுகள் ஆகியவை பரப்பப்பட்டு வருகின்றன.
     இதையடுத்து, கடலூர் மாவட்ட விசிக இணைச் செயலர் இல.திருமேனி தலைமையில், வழக்குரைஞர்கள் பாஸ்கர், கனகராஜ் உள்ளிட்டோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனிடம் மனு அளித்தனர்.
     அந்த மனுவில், "டிக்-டாக்' என்ற செயலி மூலம் சிலர் கட்சித் தலைவர் திருமாவளவன் படம், கட்சிக் கொடியின் நிறம் கொண்ட டி-ஷர்ட், வேட்டிகளை அணிந்து கொண்டு சில குறிப்பிட்ட சாதியின் பெயரைச் சொல்லி அவதூறாகப் பேசி, விடியோ பதிவிட்டுள்ளனர்.
     இதன் மூலமாக தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் பதற்றத்தையும், சாதி மோதல்களையும் உருவாக்கி தேர்தலைச் சீர்குலைக்க சிலர் திட்டமிட்டு இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
     எனவே, கட்சிக்கு களங்கத்தை விளைவிக்கும் தீய எண்ணத்துடன் செயல்பட்டுள்ள நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai