Enable Javscript for better performance
சாலையில் வீசப்பட்ட காலாவதியான தின்பண்டங்கள்- Dinamani

சுடச்சுட

    

    திட்டக்குடியில் காலாவதியான தின்பண்டங்கள் சாலையில் வீசப்பட்டுக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
     திட்டக்குடியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்குச் செல்லும் சாலையில் புதன்கிழமை பொட்டலமிடப்பட்ட ஏராளமான தின்பண்டங்கள் சாலையோரத்திலும், மரங்களின் மீதும் வீசப்பட்டு கிடந்ததன.
     இவற்றை அந்த வழியாகச் சென்ற மாணவ, மாணவிகள், பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். தகவலறிந்த வருவாய்த் துறையினர் அங்கு சென்று, வீசி செல்லப்பட்ட தின்பண்டங்களை கைப்பற்றி பரிசோதனை செய்தனர். இதில், அவை காலாவதியானவை என்பது தெரிய வந்தது.
     காலாவதியான உணவுப் பொருள்களை பாதுகாப்பான முறையில் அழிக்க வேண்டுமென உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்திய நிலையிலும், இதுபோன்று பொதுமக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் வீசிச் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதியினர் வலியுறுத்தினர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai