Enable Javscript for better performance
தேர்தல் பணி பயிற்சியில் பங்கேற்காத 790 பேருக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் பணி பயிற்சியில் பங்கேற்காத 790 பேருக்கு நோட்டீஸ்

    By DIN  |   Published on : 28th March 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் பணி பயிற்சியில் பங்கேற்காத 790 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
     கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,301 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தல் பணியில் மொத்தம் 12 ஆயிரம் பேர் வரை ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள், அந்தந்தத் துறை வாரியாகத் தேர்வு செய்யப்பட்டு கடந்த வாரம் முதல் கட்டப் பயிற்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஏப். 24 -ஆம் தேதி சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக நடைபெற்ற பயிற்சியில் 790 பேர் பங்கேற்கவில்லை. இதனால், தேர்தல் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உருவானது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான வெ.அன்புச்செல்வன் கூறியதாவது:
     தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான முதல் கட்டப் பயிற்சி வகுப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இதில், சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
     பங்கேற்காத 790 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
     அதில், அவர்கள் தேர்தல் பணியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு வருகிற ஏப். 7 ஆம் தேதி நடைபெறுகிறது. விளக்க நோட்டீஸýக்கு முறையாகப் பதிலளிக்காதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai