Enable Javscript for better performance
தொழிலாளர் நல வாரியத்தினர் ஓய்வூதியப் பட்டியலில் கையெழுத்திட வேண்டும்: உதவி ஆணையர்- Dinamani

சுடச்சுட

    

    தொழிலாளர் நல வாரியத்தினர் ஓய்வூதியப் பட்டியலில் கையெழுத்திட வேண்டும்: உதவி ஆணையர்

    By DIN  |   Published on : 28th March 2019 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழிலாளர் நல வாரியத்தினர் ஓய்வூதியப் பட்டியலில் கையெழுத்திடவேண்டும் என உதவி ஆணையர் தெரிவித்தார்.
     கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம், உடலுழைப்பு தொழிலாளர்கள் உள்ளிட்ட 14 நல வாரியங்கள், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியங்களில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
     இதன் மூலமாக ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்கள் 2019- 2020 ஆம் ஆண்டுக்கு தடையின்றி மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கு அதற்கான பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டும்.
     அதன்படி, கடலூர் செம்மண்டலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் பின்புறம் உள்ள தீபன் நகரில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆயுள் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை நகலை அளித்து ஓய்வூதியப் பட்டியலில் கையெழுத்திட்டு தடையின்றி ஓய்வு ஊதியம் பெற்றுக் கொள்ளலாம்.
     எனவே, தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்கள் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டுமென கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai