Enable Javscript for better performance
பறக்கும் படை வாகனச் சோதனையில் ரூ. 9.31 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    நெய்வேலி, பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் புதன்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ. 9.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
     மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
     அதன்படி, புதன்கிழமை பண்ருட்டியை அடுத்த வீரப்பெருமாநல்லூர் அருகே சித்தூர் சாலையில், பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதி நிலைக்கண்காணிப்புக் குழு-1 வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
     அப்போது, அந்த வழியாக வந்த பண்ருட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், அந்த வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து நூறு ரூபாயை பறிமுதல் செய்தனர்.
     இதேபோல, நெய்வேலி, 18-ஆவது வட்டம் அருகே வந்த பிரேமா என்பவரின் காரில் இருந்த ரூ. 6,68,492-ஐ நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி நிலைக்கண்காணிப்புக் குழு-1 வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.
     குறிஞ்சிப்பாடி வடக்குமேலூர் அருகே வந்த செüந்தரபாண்டியன் என்பவரின் காரில் இருந்த ரூ. 80 ஆயிரத்தை நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை குழு-3 ரங்கதாஸ் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர். வட்டம் 19-இல் பாலசுப்பிரமணியன் என்பவரது பைக்கில் இருந்த ரூ. 83,360-ஐ நிலைக்கண்காணிப்புக் குழு-3 வட்டாட்சியர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.
     இந்த நான்கு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ. 9,31,952-ஐ பண்ருட்டி வட்டாட்சியர் கீதாவிடம் ஒப்படைத்தனர்.
     கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி மொத்தம் ரூ. 13 லட்சத்தை புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai