Enable Javscript for better performance
மதவாத சக்திகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை: தொல்.திருமாவளவன்- Dinamani

சுடச்சுட

    

    மதவாத சக்திகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை: தொல்.திருமாவளவன்

    By DIN  |   Published on : 28th March 2019 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதவாத சக்திகளுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
     சிதம்பரத்தில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மஹாலில் புதன்கிழமை நடைபெற்றது.
     இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் பேசியதாவது:
     நான் அனைத்து சமுதாய மக்களிடம் நல்லிணக்கத்துடன் இருப்பவன். வாக்கு வங்கி சதவீத அடிப்படையில் பேரம்பேசி கூட்டணி சேர்ந்தவர்கள் என் மீது அபாண்டமாகப் பழி போடுகின்றனர். எங்களுடன் கூட்டணி வைத்தால் தொகுதிகள் கிடைக்கும். பணம் கிடைக்காது என்று ஸ்டாலின் கூறினார். அதனால்தான் பாமகவும், தேமுதிகவும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டன.
     பல்வேறு போராட்டங்களின் போது, எனது கையை உயர்த்திப் பிடித்து என் தம்பியையும், என்னையும் இனி யாராலும் பிரிக்க முடியாது என முழங்கிய ராமதாஸ்தான், தற்போது என்னைக் கடுமையாகப் பேசி வருகிறார். அவர் பேசவில்லை. அவரை பாஜக பேச வைத்தது. நீங்களும், திருமாவும் அண்ணன், தம்பி என்றால் ஓட்டுப் போட மாட்டார்கள்.
     அவரை எதிர்த்தால்தான் உங்களுக்கு ஓட்டுகள் விழும் என்றார்கள்.
     நான் சாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுபவன் அல்ல. பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு ஆணாதிக்க சமுதாயம்தான் காரணம்.
     தற்போதைய சூழலில் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதே எங்களது நோக்கம். மதவாத சக்திகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை.
     நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், 2019 தேர்தலுக்குப் பிறகு இனி தேர்தலே நடக்காது என பாஜகவினரே கூறி வருகின்றனர். அகில இந்திய அளவில் மாநிலக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றார் அவர்.
     கூட்டத்தில் கடலூர் மாவட்ட திமுக செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினார். நகர திமுக செயலர் கே.ஆர்.செந்தில்குமார் வரவேற்றார்.
     மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலர் ஆறுமுகம், ஒன்றியச் செயலர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, இந்திய கம்யூ. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வே.மணிவாசகம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செந்தில்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் முடிவண்ணன், மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலர் முகமது இக்பால், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் முகமது இக்மான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் வன்னியரசு, மாவட்டச் செயலர் பால.அறவாழி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai