தொழிலாளர் நல வாரியத்தினர் ஓய்வூதியப் பட்டியலில் கையெழுத்திட வேண்டும்: உதவி ஆணையர்
By DIN | Published On : 28th March 2019 09:23 AM | Last Updated : 28th March 2019 09:23 AM | அ+அ அ- |

தொழிலாளர் நல வாரியத்தினர் ஓய்வூதியப் பட்டியலில் கையெழுத்திடவேண்டும் என உதவி ஆணையர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம், உடலுழைப்பு தொழிலாளர்கள் உள்ளிட்ட 14 நல வாரியங்கள், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியங்களில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலமாக ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்கள் 2019- 2020 ஆம் ஆண்டுக்கு தடையின்றி மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கு அதற்கான பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டும்.
அதன்படி, கடலூர் செம்மண்டலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் பின்புறம் உள்ள தீபன் நகரில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆயுள் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை நகலை அளித்து ஓய்வூதியப் பட்டியலில் கையெழுத்திட்டு தடையின்றி ஓய்வு ஊதியம் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்கள் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டுமென கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...