குவாரி குட்டையில் மூழ்கிய மாணவர் சாவு

நெய்வேலி அருகே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துவிட்டு, கிராவல் குவாரி குட்டையில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

நெய்வேலி அருகே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துவிட்டு, கிராவல் குவாரி குட்டையில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
 குறிஞ்சிப்பாடி வட்டம், விருப்பாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அரசப்பன். இவரது மகன் அகிலன் (15), நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். வெள்ளிக்கிழமை கடைசி தேர்வு எழுதியவர், சக நண்பர்களுடன், தென்குத்து புதுநகர் அருகே உள்ள கிராவல் குவாரி குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரில் குளித்தார். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற அகிலன் தண்ணீரில் மூழ்கினார். சக மாணவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனராம்.
 பின்னர், அந்த வழியாக வந்தவர்கள் குட்டையில் மாணவரின் சடலம் மிதப்பதைக் கண்டு வடலூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் மாணவனின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com