Enable Javscript for better performance
மே தினம்: தொழிற்சங்கங்கள், அமைப்புகள் கொண்டாட்டம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மே தினம்: தொழிற்சங்கங்கள், அமைப்புகள் கொண்டாட்டம்

    By  கடலூர்/நெய்வேலி/சிதம்பரம்,  |   Published On : 02nd May 2019 08:31 AM  |   Last Updated : 02nd May 2019 08:31 AM  |  அ+அ அ-  |  

    கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம் பகுதிகளில் தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில், மே தின விழா புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
     மே தினத்தையொட்டி, கடலூரில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில், பேருந்து நிலையம் அருகே உள்ள மா.சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
     நிகழ்ச்சியில் பேரவையின் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தலைமையில், மாநில செயலர் எஸ்.கெஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட துணைத் தலைவர் கே.சுப்புராயன், மாவட்ட செயலர் பி.கோகிலன், பொருளாளர் ஏ.மாலைமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     இதேபோல, சிஐடியூ சார்பில் மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமையில் சிங்காரவேலனார் சிலைக்கு மாலை அணிவித்து, சங்கக் கொடியேற்றப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயலர் பி.கருப்பையன், துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார், இணைச் செயலர்கள் ஏ.பாபு, வி.சுப்புராயன், வி.திருமுருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மு.மருதவாணன், நகரச் செயலர் ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் சங்கம் சார்பில், கடலூரில் அதன் மாவட்டத் தலைவர் டி.சாமிதுரை தலைமையில், பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரகம் பழைய அலுவலகம் எதிரே சங்க மாநிலத் தலைவர் எஸ்.ராமர் சங்கக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
     தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில், கடலூரில் பெரியார் சிலையிலிருந்து அதன் மாவட்டத் தலைவர் கோ.சீனிவாசன் தலைமையில் பேரணி நடைபெற்றது. பேரணி கடலூர் நகர அரங்கை நிறைவடைந்ததும் மே தின விழா கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.
     மாவட்டச் செயலர் ஏ.வி.விவேகானந்தன், துணைத் தலைவர் துரை.சேகர், மாநிலச் செயல் தலைவர் கு.சரவணன், மாநில நிர்வாகிகள் வெ.சிவகுமார், அ.சுந்தரமூர்த்தி, மாவட்ட முன்னாள் செயலர் மு.ராசாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     ஏஐடியூசி, சிஐடியூசி ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிபுலியூரில் நடைபெற்றது. ஏஐடியூசி மாவட்ட சிறப்புத் தலைவர் என்.மாரியப்பன், சிஐடியூ மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் நிகழ்சிகளுக்கு தலைமை வகித்தனர். பத்திரப் பதிவு அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி, சன்னதி தெருவில் நிறைவடைந்தது. தொடர்ந்து, அங்கு மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியூ மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, தொலைபேசி சங்க மாநில செயலர் கே.நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
     இதேபோல, மாவட்டம் முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
     நெய்வேலியில்...: நெய்வேலி தொமுச அலுவலக வளாகத்தில் அதன் தலைவர் வீர.ராமச்சந்திரன் தலைமையில், பொதுச் செயலர் சி.சுகுமார் சங்கக் கொடியேற்றினார். பொருளாளர் வி.குருநாதன் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்து, தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். முன்னதாக, வளாகத்தில் உள்ள தந்தை பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள், பகுதிச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
     நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சிஐடியு அலுவக வளாகத்தில் கொண்டாடப்பட்ட மே தின விழாவுக்கு அந்தச் சங்கத்தின் தலைவர் ஏ.வேல்முருகன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில பொதுச் செயலர் ஜி.சுகுமார் சங்கக் கொடியேற்றி, இனிப்புகளை வழங்கினார். பொதுச் செயலர் டி.ஜெயராமன், மாவட்டப் பொருளாளர் ஜி.குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     பண்ருட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின விழா நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது. மாவட்டச் செயலர் பி.துரை தலைமை வகித்து கொடியேற்றி, இனிப்புகளை வழங்கினார். முன்னதாக, நகர்மன்ற முன்னாள் தலைவர் மறைந்த ஏ.மணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், கட்டுமானத் துறை மாவட்டத் துணைத் தலைவர் முருகன், துப்புரவாளர் சங்கத் தலைவர் குப்புசாமி, செயலர் முருகன், பொருளாளர் பாலு, சக்கரவர்த்தி, ஏஐடியுசி மாவட்டக் குழு ராமச்சந்திரன், பலராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     இதேபோல, பண்ருட்டி பேரறிஞர் அண்ணா சுமைப் பணி தொழிலாளர் சங்கம் சார்பில், கும்பகோணம் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
     நகர சுமைப் பணிச் செயலர் நாகராஜ் தலைமை வகித்து கொடியேற்றி, இனிப்புகளை வழங்கினார். நிர்வாகிகள் ரங்கநாதன், உதயகுமார், உத்திராபதி, ராஜேந்திரன், ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இணைப்புச் சாலை, கடலூர் சாலை, ரத்தினம் பிள்ளை காய்கறி சந்தை உள்ளிட்ட இடங்களில் மே தின கொடியேற்றப்பட்டது.
     சிதம்பரத்தில்...: சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், மே தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
     நிகழ்ச்சிக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.தீபக்குமார் தலைமை வகித்தார்.ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர்கள் வி.நடனசபாபதி, ஆர்.எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பங்கேற்ற 50 தொழிலாளர்களுக்கு கைலி, சட்டை, இனிப்பு, காரம் ஆகியவற்றை தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் க.தனஞ்செயம் வழங்கி, வாழ்த்திப் பேசினார்.
     விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பி.முஹமதுயாசின், பி.பன்னீர்செல்வம், ஜி.பன்னீர்செல்வம், ஆர்.கோவிந்தராஜன், சிவசங்கரன், ராஜசேகரன், ஸ்ரீவித்யா, பொற்செல்வி, ரவிச்சந்திரன், சரவணன், அங்கித்ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டனர். அனிதா தீபக்குமார் நன்றி கூறினார்.
     ரஜினி மக்கள் மன்றம் சார்பில்...:சிதம்பரம் மேலவீதி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில், மே தின விழா கொண்டாடப்பட்டது.
     மன்றத்தின் மாவட்ட துணைச் செயலர் மன்னன் வே.ரமேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் எம்.எல்.ஆஷிஷ்குமார் வரவேற்றார். நிர்வாகிகள் பி.கே.சக்திவேல், ஜி.சபாபதி தீட்சிதர், ஆர்.தீபக்ராஜ், எம்.கோகுல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணிச் செயலர் இ.வில்சன், மார்க்கெட் சங்கச் செயலர் ஆர்.ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.வின்சென்ட்ராஜ் ஆகியோர் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வேட்டி, துண்டு, கைலிகளை வழங்கினர்.
     மன்றத்தின் நகர இளைஞரணிச் செயலர் எஸ்.கார்த்தி, புவனை ஒன்றிய இளைஞரணி இணைச் செயலர் என்.எஸ்.மணி, குமராட்சி ஒன்றிய துணைச் செயலர் எஸ்.மணிவண்ணன், நகர இளைஞரணி துணைச் செயலர் என்.முத்து, குமராட்சி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பி.ராமலிங்கம், நிர்வாகிகள் தோப்பு எஸ்.சரவணன், எஸ்.சஞ்சீவி, என்.பரணிதரன், ஜி.சுரேஷ், வி.மணிகண்டன், எஸ்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp