சுடச்சுட

    

    ஆற்றில் மீனவர் சடலம் கிடந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     கடலூர் அருகிலுள்ள சோனங்குப்பம் பழைய சுனாமி நகரைச் சேர்ந்தவர் சி.சக்திவேல் (40). மீனவரான இவர், கடந்த 12- ஆம் தேதி மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறி தென்பெண்ணையாற்றுக்குச் சென்றாராம். ஆனால், மறுநாள் வரை வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து அவரது மனைவி சிலம்பரசி (30). காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
     இந்த நிலையில், கடலூர் அருகே வெளிசெம்மண்டலம் தென்பெண்ணையாற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் சடலமாக மீட்கப்பட்டவர் சக்திவேல் என்பது தெரிய வந்தது.
     இதையடுத்து, சிலம்பரசியிடமிருந்து புகாரை பெற்று சக்திவேல் உடலை உடற்கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai