கமல்ஹாசன் மீது காவல் நிலையத்தில் புகார்
By DIN | Published On : 16th May 2019 08:56 AM | Last Updated : 16th May 2019 08:56 AM | அ+அ அ- |

இந்துக்களை தொடர்ந்து இழிவாகப் பேசி வரும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தனர்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் கடலூர் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா அளித்த புகார் மனு:
வருகிற 19-ஆம் தேதி 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தொகுதிகலில் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கடந்த 12-ஆம் தேதி அரவக்குறிச்சியில் இந்துக்கள் மனது புன்படும் விதமாகப் பேசியுள்ளார்.
தனது பேச்சு, திரைப்படம் ஆகியவற்றின் மூலம் இந்துக்களை இழிவுபடுத்தும் வேலையை கமல்ஹாசன் திட்டமிட்டு செய்து வருகிறார்.
எனவே, அவர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.