பண்ருட்டியில் அணுகு சாலையை அமைக்காவிடில் போராட்டம்: காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் அறிவிப்பு

பண்ருட்டி ரத்தினம் பிள்ளை காய்கறி சந்தைக்கு சரக்கு வாகனங்கள் வந்து செல்லும் வகையில், அணுகு சாலையை அமைக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என்று காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

பண்ருட்டி ரத்தினம் பிள்ளை காய்கறி சந்தைக்கு சரக்கு வாகனங்கள் வந்து செல்லும் வகையில், அணுகு சாலையை அமைக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என்று காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
 பண்ருட்டி - சென்னை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் அமைக்கும் பணி தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் ஆன நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், பாலத்தின் இரு புறத்திலும் இதுநாள் வரை அணுகு சாலை அமைக்கப்படவில்லை. அவ்வாறு சாலை இல்லாததால், அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 குறிப்பாக, லாரிகள் செல்ல முடியாத நிலையில் பண்ருட்டி ரத்தினம் பிள்ளை காய்கறி சந்தையில் உள்ள காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.
 இந்த நிலையில், பண்ருட்டி ரத்தினம் பிள்ளை காய்கனி சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
 அந்தச் சங்கத்தின் தலைவர் சிவா தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆறுமுகம், சீனுவாசன், லூர்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் மோகன் வரவேற்றார். தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம், பொதுச் செயலர் வி.வீரப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினர்.
 கூட்டத்தில் கூலி உயர்வு, அணுகு சாலை குறித்து விவாதிக்கப்பட்டது.
 அப்போது, ரத்தினம் பிள்ளை காய்கறி சந்தைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் வந்து செல்கின்றன. மேம்பாலத்தின் இருபுறத்திலும் அணுகு சாலை அமைக்கப்படவில்லை. லாரிகள் வந்து செல்லும் வகையில் அணுகு சாலை அமைக்க வேண்டும்.
 இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com