முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
இருஜோடி கண்கள் தானம்
By DIN | Published On : 18th May 2019 07:53 AM | Last Updated : 18th May 2019 07:53 AM | அ+அ அ- |

பண்ருட்டி சத்தியமூர்த்தி வீதியைச் சேர்ந்த எழில்நிலா (58), மேல்புவனகிரி கோட்டைமேட்டுத் தெருவைச் சேர்ந்த எஸ்.மனோகரன் (75) ஆகியோர் காலமானார்கள். இவர்களது இருஜோடி கண்கள் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், புவனகிரி அரிமா சங்க நிர்வாகிகள் ரகுராமன், அருண்குமார், ராம்குமார் ஆகியோர் செய்தனர்.