முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
ஏழை மாணவருக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் உதவி
By DIN | Published On : 18th May 2019 08:00 AM | Last Updated : 18th May 2019 08:00 AM | அ+அ அ- |

ஏழை மாணவரின் கல்விச் செலவை சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் ஏற்று செலுத்தியது.
சிதம்பரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த முகம்மது ரஷீத் என்ற ஏழை மாணவரின் பிளஸ்1, பிளஸ்2 படிப்புக்கான முழுமையான கல்வி கட்டணத்தை சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எம்.தீபக்குமார், சாசனத் தலைவர் பி.முகம்மது யாசின் ஆகியோர் ஏற்றுக் கொண்டு, பிளஸ்1 வகுப்புக்கான நிகழாண்டு கல்வி கட்டணமான ரூ.13 ஆயிரத்தை சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சிவகுருவிடம் வெள்ளிக்கிழமை வழங்கினர் (படம்).
நிகழ்ச்சியில் மூத்த உறுப்பினர் ஏ.அஷ்ரப்அலி, பள்ளி ஆசிரியர் முத்துக்குமாரன், மாணவரின் தாயார் பேபி சர்மிளா ஆகியோர் பங்கேற்றனர்.