முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கொலை வழக்கில் தொடர்புடையவர் தடுப்புக் காவலில் கைது
By DIN | Published On : 18th May 2019 07:58 AM | Last Updated : 18th May 2019 07:58 AM | அ+அ அ- |

கொலை வழக்கில் தொடர்புடையவர் தடுப்புக் காவலில் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
வடலூர் ராசாக்குப்பத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் செந்தில்குமார் (43). இவர் கடந்த ஏப்.20-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வடலூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமாரி விசாரணை நடத்தி, ராசாக்குப்பத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் சந்தோஷ்குமார் (37) என்பவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். சந்தோஷ்குமாரின் குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அவரை ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சந்தோஷ்குமார் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.