முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
சிங்கிரிகுடி கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 18th May 2019 07:58 AM | Last Updated : 18th May 2019 07:58 AM | அ+அ அ- |

கடலூர் அருகே சிங்கிரிகுடியில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
கடலுôர் ஊராட்சி ஒன்றியம், புதுவை மாநிலத்தை ஒட்டிய பகுதியில் உள்ள சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் உலா வந்தார்.
நரசிம்மர் ஜெயந்தி மற்றும் பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணியளவில் பெருமாள் தேரில் எழுந்தருளினார்.
இதையடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேர் புறப்பாடு நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் சிங்கிரிகுடி கிராம மக்கள் செய்திருந்தனர்.