முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
தேரடி பேருந்து நிறுத்தத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
By DIN | Published On : 18th May 2019 07:59 AM | Last Updated : 18th May 2019 07:59 AM | அ+அ அ- |

சிதம்பரம் நகரில் கீழவீதி தேரடி பேருந்து நிறுத்தத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது.
பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் பிரதான வாயிலாக கீழரத வீதியில் உள்ள கிழக்கு கோபுல வாயில் திகழ்கிறது. இதன் நேர் எதிர் பகுதியில் தேர் நிறுத்தும் இடம் உள்ளது. தற்போது தேர் நிறுத்தப்பட்டுள்ள பகுதி தகர ஷீட்டுகளால் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பிரதான வாயில் எதிரே உள்ள தேர் நிறுத்தம் முன் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் கொட்டப்படும் குப்பைகளால் அந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம், சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது.
மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பேருந்தில் இருந்து இறங்கும்போது குப்பைகளை மிதித்துதான் இறங்கும் நிலை உள்ளது என புகார் கூறப்படுகிறது.
எனவே தேர் நிறுத்தம் அருகே கோயிலின் பிரதான வாயில் முன் உள்ள குப்பைத் தொட்டியை அகற்றிவிட்டு, தூய்மையை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடராஜர் கோயில் வழிபாட்டு மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.