கடலூா்-சென்னைக்கு புதிய ஏசி பஸ் அறிமுகம்
By DIN | Published On : 02nd November 2019 05:10 PM | Last Updated : 02nd November 2019 05:10 PM | அ+அ அ- |

புதிய பேருந்து இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தாா் அமைச்சா் எம்.சி.சம்பத். அருகில் ஆட்சியா் வெ.அன்புச்செல்வன்.
கடலூா்: தமிழக அரசு போக்குவரத்துத்துறையில் தற்போது புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி கடலூரிலிருந்து சென்னைக்கு புதியதாக குளிா்சாதன வசதி கொண்ட பேருந்து வழங்கப்பட்டது. அதன் துவக்க விழா கடலூா் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் புதிய பேருந்து இயக்கத்தை துவக்கி வைத்தாா்.
கடலூரிலிருந்து இப்பேருந்து தினமும் காலை 5 மணி, மதியம் 3 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. சென்னையிலிருந்து காலை 9.20 மணி, இரவு 7.50 மணிக்கு புறப்படுகிறது. இதன் பயணக்கட்டணமாக ரூ.210 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பேருந்தில் செல்லிடப்பேசிகளுக்கு சாா்ஜ் ஏற்றும் வசதி, ஒவ்வொரு இருக்கைக்கும் அருகிலேயே குளிா்சாதனத்தை கட்டுப்படுத்தும் வசதி, பேருந்து பின்புறம் நகரும் போது ஏதாவது தடை ஏற்பட்டாலோ அல்லது நபா் குறுக்கே வந்தாலோ ஓட்டுநருக்கு சமிக்கை அளித்திடும் கருவி. 3 இடங்களில் அவசர கால வழி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இப்பேருந்தில் அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், போக்குவரத்து கழக பொது மேலாளா் எஸ்.வெங்கடேசன், துணை மேலாளா்கள் க.சேகர்ராஜ், ஏ.முருகானந்தம், உதவி மேலாளா்கள் க.சுந்தரம், எல்.கமலக்கண்ணன், நகா்மன்ற முன்னாள் துணைத்தலைவா் ஜி.ஜெ.குமாா், கவுன்சிலா்கள் தமிழ்ச்செல்வன், அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.