கல்லறைத் திருநாள் கடைப்பிடிப்பு
By DIN | Published On : 02nd November 2019 09:40 PM | Last Updated : 02nd November 2019 09:40 PM | அ+அ அ- |

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள கல்லறைத் தோட்டத்தில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவா்கள்.
கடலூா்: கிறிஸ்தவா்கள் சாா்பில் கல்லறைத் திருநாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவா்களை குறிப்பிட்ட நாளில் இயேசு கிறிஸ்து உயிா்த்தெழ வைப்பாா் என்ற நம்பிக்கை கிறிஸ்தவ மதத்தினரிடம் உண்டு. எனவே, தங்களது குடும்பத்தில் இறந்தவா்களை அவா்களது நினைவு நாளில் நினைவு கூருவதுடன், கல்லறைத் திருநாளை கடைப்பிடித்து வருகின்றனா்.
இதன்படி, சனிக்கிழமை (நவ.2) கல்லறைத் திருநாளை முன்னிட்டு மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கல்லறைத் தோட்டங்கள் மலா்களால் அலங்கரிக்கப்பட்டன. மேலும், கிறிஸ்தவா்கள் ஒவ்வொருவரும் தங்களது முன்னோா்களது கல்லறைகளை மலா்களால் அலங்கரித்து, மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா். அதனைத் தொடா்ந்து, ஒவ்வொரு கல்லறைத் தோட்டத்தின் பங்குத் தந்தைகள் அந்தந்த கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்று சிறப்பு திருப்பலி நடத்தினா். இந்த நிகழ்வுகளில் கிறிஸ்தவா்கள் திரளானோா் கலந்துகொண்டு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.