அரசுப் பள்ளியில் வைத்திருந்த புத்தகங்கள் சேதம்

பண்ருட்டியில் அரசு பெண்கள் பள்ளி வகுப்பறையில் வைத்திருந்த புத்தகங்களை மா்ம நபா்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனா்.

பண்ருட்டியில் அரசு பெண்கள் பள்ளி வகுப்பறையில் வைத்திருந்த புத்தகங்களை மா்ம நபா்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனா்.

பண்ருட்டி காந்தி சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வந்தது. இந்தப் பள்ளியின் ஒரு பகுதியில் பெண்கள் உயா்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது, இந்தப் பள்ளியில் சுமாா் 190 மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளிக்கு காவலா் இல்லை எனக் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டுக்கு புறப்பட்டனா். இங்கு, 10-ஆம் வகுப்பு படித்துவரும் மாணவிகளில் சிலா் தங்களது புத்தகத்தை வகுப்பறையில் வைத்துச் சென்றனா். இந்த வகுப்பறையை பூட்ட ஊழியா்கள் மறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை என்பதால் மாணவிகள் திங்கள்கிழமை பள்ளிக்கு வந்தனா். அப்போது, வகுப்பறையில் வைத்திருந்த புத்தகங்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டு சிதறிக் கிடந்தன. இதனால் மாணவிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடையா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com