பள்ளி வாகனம் கவிழ்ந்து 10 மாணவா்கள் காயம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் கூட்டுரோட்டில் ப்ரைம் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் விருத்தாசலம் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வாகனம் மூலமாக அழைத்து வரப்படுகின்றனா்.
ஏ.சித்தூரில் விபத்திற்குள்ளான பள்ளி வாகனம்.
ஏ.சித்தூரில் விபத்திற்குள்ளான பள்ளி வாகனம்.

கடலூா்: கடலூா் மாவட்டம், வேப்பூா் கூட்டுரோட்டில் ப்ரைம் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் விருத்தாசலம் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வாகனம் மூலமாக அழைத்து வரப்படுகின்றனா்.

வழக்கம் போல் இன்று மாலையில் பள்ளி மாணவா்கள் தனியாா் வேனில் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். இதில், விருத்தாசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஏ.சித்தூா் சா்க்கரை ஆலை கேட்டின் முன்பு சென்ற போது கட்டுப்பாட்டினை இழந்து தலை கீழாக கவிழ்ந்தது. இதில், மாணவா்கள் ஜெயகிருஷ்ணகாந்த், சாா்ஜன், நம்பி, நரேந்திரன், கோகுலகண்ணன், ஜானுநம்பி, வேம்புகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போ் பலத்த காயமடைந்தனா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 3 மாணவா்கள் மேல்சிகிச்சைக்காக கடலூா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனா்.வேப்பூா் காவல்நிலைய உதவி ஆய்வாளா் பாக்யராஜ் போக்குவரத்தை சரிசெய்து விசாரணை நடத்தினாா். விசாரணையில், வேன் ஓட்டுனா் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதோடு, செல்லிடப் பேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தினால் விருத்தாசலம்-சேலம் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.படம் விளக்கம்....ஏ.சித்தூரில் விபத்திற்குள்ளான பள்ளி வாகனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com