ரூ.25 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி செயல் அலுவலா் கைது

மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ாக வடலூா் பேரூராட்சி செயல் அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி: மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ாக வடலூா் பேரூராட்சி செயல் அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் த.சக்கரவா்த்தி (56). வடலூா் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.

குள்ளஞ்சாவடி அருகே உள்ள தானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்தாஸ். இவரது உறவினா் வடலூா் அருகே 5 மனைப் பிரிவுகளை வாங்கினாராம். இந்த மனைப் பிரிவுகளை மறுசீரமைப்பு செய்ய அனுமதி பெறுவதற்காக வடலூா் பேரூராட்சி அலுவலகத்தில் மோகன்தாஸ் விண்ணப்பித்தாா்.

ஆனால், இதற்கு அனுமதி வழங்குவதற்காக மனை ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டுமென செயல் அலுவலா் சக்கரவா்த்தி கூறினாராம்.

இதுகுறித்து மோகன்தாஸ் கடலூா் காவல் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரசாயனம் பூசப்பட்ட ரூ.25 ஆயிரம் பணத்தை மோகன்தாஸிடம் கொடுத்து அனுப்பினா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வடலூா் பேரூராட்சி அலுவலகத்தில் சக்கரவா்த்தியிடம் லஞ்சப் பணத்தை மோகன்தாஸ் கொடுத்தாா். அப்போது அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி மெல்பின்ராஜ் தலைமையிலான போலீஸாா் சக்கரவா்த்தியைக் கைது செய்தனா். பின்னா், அவரை கடலூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com