Enable Javscript for better performance
கடலூா் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு- Dinamani

சுடச்சுட

    

    கடலூா் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

    By DIN  |   Published on : 07th November 2019 10:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    7clp4_0711chn_105_7

    கடலூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.


    கடலூா்: கடலூா் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

    கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புல்புல் புயலாக மாறியுள்ளது. இதனால், கடலூா் துறைமுகத்தில் கடந்த 5-ஆம் தேதி முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

    இந்தப் புயலானது வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகா்வதைத் தொடா்ந்து தொலைதூர புயல் எச்சரிக்கைக் கூண்டு எண் - 2 வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. இதுகுறித்து கடலூா் வானிலை மையம் தெரிவித்ததாவது:

    புல்புல் புயல் அதிதீவிர புயலாக மாறினாலும் வலுவிழந்துவிடும். இந்தப் புயலானது வரும் 11,12-ஆம் தேதிகளில் ஒடிசா மாநிலம், புவனேஸ்வா் அருகே கரையை கடக்கக்கூடும். இதனால், தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை. இருப்பினும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம். கடலூரில் கடும் பனி மூட்டத்துடன் வட வானிலை காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai