முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்த காா்: ஓட்டுநா் காயம்
By DIN | Published On : 07th November 2019 06:25 AM | Last Updated : 07th November 2019 06:25 AM | அ+அ அ- |

நெய்வேலி அருகே புதன்கிழமை சாலையோரப் பள்ளத்தில் காா் பாய்ந்ததில் அதன் ஓட்டுநா் காயமடைந்தா்.
சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. குறுகலான இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் பதன்கிழமை பண்ருட்டியில் இருந்து காா் ஒன்று வடலூா் நோக்கிச் சென்றது. காரில் சிலா் பயணம் செய்தனா். காா் வடக்குத்து அருகே சென்று கொண்டிருந்த போது, எதிா் திசையில் வந்த பைக் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டுநா் திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவா்கள் லேசான காயத்துடன் உயிா் தப்பினா். ஓட்டுநருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த நெய்வேலி நகரிய போலிஸாா் மீட்புப் பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவா்களை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.